நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினாதீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி தபீடங்களில் தேவியின் இருப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகின்றது. ஒலு சிலர் உண்மையான சக்தி பீடக்கோவில் போர்ச்சுக்கீசர் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. என்று கூறப்படுகின்றது. 
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கொயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் கலயமாகும். இக்கோவிலின் கருவறையில் உள்ள சீறும் ஐந்து தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் வரை பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இக்கோயில் பல்வேறு தொடர்புகளைக் கொண்டுள்ளது. வரலாற்று குறிப்புக்கள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் செய்திகள், புராண வரலாறுகள் என பல்வேறு தொடர்புகளையும் கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத்தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்துள்ளது. https://www.youtube.com/watch?v=y6HUBt2ZkXU
எனவே தொகுத்து நோக்கும்போது தமிழர்களின் வரலாறு எகிப்துடன் தொடர்புபடுத்தி பார்க்கம் இன்றைய காலகட்டத்தில் நாகவழிபாட்டின் மூலம் சிறப்பு பெறுவதுடன் தமிழரின் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயம் என்றவகையிலும் முன்னைய காலத்தில் இருந்து இன்றுவரை புகழ்பெற்றிருக்கம் சப்ததீவுகளில் ஒன்றாகவும் இவ்வாலயம் விளங்குவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
உசாத்துணைகள்
S.Shawmighah
University of jaffna
No comments:
Post a Comment